நெஞ்சுக்குள் ஒரு நெருஞ்சிமுள்
Nenjukkul Oru Nerunjimul
₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர். சியாமலா
பதிப்பகம் :செங்கைப் பதிப்பகம்
Publisher :Sengai Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :336
பதிப்பு :1
Published on :2009
Add to Cartஇது என் ஐந்தாவது நாவல். ஒவ்வொரு நாவலுக்கும் கதாபாத்திரங்களையும், சம்பவங்களையும், என்னைச் சுற்றியிருக்கும் சமூகத்திலிருந்தே எடுத்துக் கொள்கிறேன். ஆனால் பெரும்பாலும், நிஜ வாழ்க்கையில் சந்தர்ப்ப சூழ்நிலைகளாலும், தனிப்பட்ட குணாதிசயங்களாலும் வாழ்க்கையை மேலும் மேலும் சிக்கலாக்கிக் கொண்டு வருத்தங்களுடனேயே வாழ்ந்து முடித்து விடுகிறார்கள். என் நாவல்களில் நான் எப்போதும் ஒரு சுமுகமான சுபமான முடிவுகளையே தருவதற்கு விரும்புவதால் சம்பவங்களையும், பின்னணிகளையும், உரையாடல்களையும் அதற்கேற்றபடி அமைத்துக் கொள்கிறேன்.
'நெஞ்சுக்குள் ஒரு நெருஞ்சி முள்' கதாநாயகி நீலவேணியை ஒரு பத்திரிகையாளராக முதன் முதலில் சந்தித்தபோது அதிர்ச்சியடைந்து, செயலிழந்தும் போனேன். அதுவரை நான் ஊனமுற்றவர்களை சாலைகளில் கடந்து போகும்போதும், திரைப்படங்களிலும் மட்டுமே சந்தித்திருந்தேன். ஆனால் நிஜமாகவே கண்களுக்கு முன் இப்படி ஒரு பெண்... மிக வெற்றிகரமாக புகழ்பெற்ற கல்வி ஸ்தாபனம் ஒன்றில் மிக அரிய பாடப்பிரிவின் பேராசிரியையாகப் பணியாற்றிக் கொண்டிருப்பதை அறிந்ததும் நான் அடைந்த வியப்பிற்கு அளவே இல்லை. அவரே காரை ஓட்டுகிறார்! அவரே ஓரளவு சமையல் செய்கிறார்! எல்லாம் பிரமிப்பாக இருந்தது. அவரை இந்த அளவிற்கு உயர்ந்து நிற்க அவருடைய பெற்றோர்கள் செய்திருக்கிற தியாகத்தை எழுத்தில் வடிக்க இயலாது. அதைவிட உலக மகா வியப்பாக இத்தகைய பெண்ணை தானே முன்வந்து தன் மனைவியாக்கிக் கொண்டு, அவளைத் தாயார் ஸ்தானத்திற்கும் உயர்த்தி வைத்துள்ள அவரின் கணவரைப் பார்த்தபோது... தெய்வப் பிறவி என்பார்களே அவர்தானோ இவர் என்று ஆச்சர்யப்பட்டேன்.