book

நீடித்தவோளாண்மையும் வல்லரசிய எதிர்ப்பும்

Needithavelaanmaiyum Vallarasiya Ethirppum

₹105+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சே. கோச்சடை
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :விவசாயம்
பக்கங்கள் :275
பதிப்பு :1
Published on :2006
ISBN :9788123410456
குறிச்சொற்கள் :உழவுத் தொழில், வேளாண்மை, காடுகள், பாசன வசதி, கடன் வசதி, நவீன் தொழில்நுட்பம்
Add to Cart

நீடித்த வேளாண்மையும் வல்லரசிய எதிர்ப்பும் ;   வட அமெரிக்க நாசவேலைகள் போதாதென்று சோவியத் வீழ்ச்சியின்
பின் வந்த கடின சவால்களையும் சேர்த்து எதிர்கொள்ளும் துணிவை மட்டுமன்றி உணவில் தன்னிறைவு,பொருளாதார
ஏற்றம், சர்வதேச அறிந்தேற்பு என்று வியத்தகு பலன்களைத் தந்துள்ளது கியூபாவின் இயற்கை வேளாண்மை. குறைந்த
இடுபொருளே தேவைப்படுவதால் உலகின் பிற வறிய, வளரும் நாடுகள் பின்பற்றத்தக்க சிறந்தோர் முன் மாதிரியாக
உள்ளது கியூபாவின் நகர்புற வேளாண்மை. இந்தியா, இயற்கையோடு வாழ்ந்த நாடு என்று பழம்பெருமை ப்படுவதுண்டு.
ஆனால், பசுமைப்புரட்சி என்றபெயரில் அமெரிக்காவின் சூழ்ச்சியான வழிகாட்டலில் ரசயான விவசாயத்தை
மேற்ண்டோம்.  விளைவு விஷத்தோடு உணவைச் சாப்பிடுகிறோம். உணவோடு விஷத்தைச் சாப்பிடுகிறோம்.
நிலங்களும் மலட்டுத்தன்மை அடைகின்றன. இறுதிக்க்ட்டமாக கடன் சுமை தாங்கமுடியாது ஆயிரக்கணக்கான
விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர்.

கியூப உழவர்களின் பாரம்பரிய விவசாயத் திறனும் புரட்சி அரசு முன்னுரிமை அடிப்படையில் மேற்கொண்ட அறிவியல்
ஆய்வும் மக்களின் உயரிய கல்வியறிவும் ஏற்கத்தக்க மாற்றுகளை முயன்று பார்க்கும் மனத்திட்பமும் இவை
எல்லாவற்றுக்கும் மேலாக அருந்தியாகங்கள் புரிந்து வென்ற விடுதலையைத் தக்க வைத்துக்கொள்ளும் நெஞ்சுரமும்
இன்று  வெற்றிக் கதையாகியுள்ள கியூபாவின் நீடித்த வேளாண்மையின் வலுவான அடித்தளங்களாகும்.

                                                                                                                                          _   பதிப்பகத்தார்.