முடிவல்ல ஆரம்பம்
Mudivalla aarambam
₹55+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :D.S.P. செல்வம்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :95
பதிப்பு :5
Published on :2011
ISBN :9788184025293
Add to Cart* தான் விரும்பிய கல்லூரியில் சேர முடியாததால் நமது வாழ்க்கை முடிந்துவிட்டது என்று நினைக்காமல் அன்றைக்கு அவர் எடுத்த முடிவின் விளைவு? இன்று உலகப் பிரசித்தி பெற்றவர்களில் ஒருவராக மாறியவர்தான் இன்போசிஸ் தலைவர் நாராயணமூர்த்தி. * வயது 65. வாழ்க்கையில் நொந்து நூலாகிக் கொண்டிருந்தார் அவர். வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்கிற வெறி மட்டும் குறையவே இல்லை. வயதை ஒரு தடையாகவே நினைக்கவில்லை. அறுபத்தைந்து வயதிலும் நாம் முயன்றால் நிச்சயம் வெற்றி பெறலாம் என்ற எண்ணத்துடன் 1009 முறை தோல்வி ஏற்பட்டாலும்கூட, இது நம் வாழ்க்கையின் முடிவல்ல. இனிமேல்தான் ஆரம்பம் என்ற திடமான எண்ணத்தில் செயல்பட்டு உலகின் மிகப் பிரசித்த பெற்ற கேஎப்சி நிறுவன அதிபரானார் கர்னல் சேன்டர்ஸ். * அவர் பார்ப்பதற்கு வேடிக்கையாக இருப்பார். அவரது குழி விழுந்த கன்னம், பக்கவாத நோயால பாதிக்கப்பட்ட இடது பக்க தாடை, தட்டுத் தடுமாறிய பேச்சு ஆனாலும் மனதினுள் உறுதி. தானும் ஒரு மிகப் பெரிய நடிகனாக வேண்டும் என்று. பல அவமானங்களைச் சந்திக்க நேர்ந்தாலும் தன் விடாமுயற்சியால், தன் எண்ணப்படியே உலகின் மிகப் பெரிய நடிகராக உருவானவர்தான் சில்வஸ்டர் ஸ்டோலன்- ராக்கி படத்தின் கதாநாயகன். இத்தோடு நம் கதை முடிந்தது என்று எண்ணாமல் தொடர்ந்து செயல்பட்டதன் விளைவே அவரின் சாதனை. * சோதனை முடிவல்ல... சாதனையின் ஆரம்பம்.