வாழ்க்கையை வெற்றிகொள்வது எப்படி?
Vazhkaiyai Vetri Kolvathu Eppadi?
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :Dr.வால்டர் டோயல் ஸ்டேபிள்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :உளவியல்
பக்கங்கள் :176
பதிப்பு :12
Published on :2017
ISBN :9788184022728
Add to Cartதெருவில் நடந்து கொண்டிருக்கிறீர்கள். முன்பின் தெரியாத ஒருவர் உங்கள் பக்கத்தில் வந்து, காதருகில் 'முட்டாள்' என்று சொல்லிவிட்டுப் போய்விடுகிறார். உடனே உங்கள் ரத்தம் கொதிக்கும். அப்படிச் சொன்னவர்கள் உங்களைவிடச் சிறியவராக இருந்தால், சண்டைக்குப் போவீர்கள். வலியவராக இருந்தால்?...காலையில் எழுந்திருக்கிறீர்கள். ஜன்னலைத் திறக்கிறீர்கள். அவர் இப்போது எதுவும் செய்ய வேண்டாம். காறித் துப்ப வேண்டாம். கல் எடுத்து அடிக்க வேண்டாம். சும்மா நின்றிருந்தாலே போதும். உங்களுக்குப் படபடப்பு வந்துவிடுமல்லவா? காரியங்கள் தாறுமாறாகிவிடுமல்லவா? அவர் வலியவரோ, எளியவரோ… ஆனால், சொன்னபடி உங்களை முட்டாளாக்கிக் காட்டிவிட்டார் அல்லவா? நீங்கள் நண்பர் என்று நினைப்பவருக்குக் கூட இவ்வளவு சக்தி இல்லையே? யாரையாவது நீங்கள் எதிரியாக நினைத்தால், அவர் ஆற்றல் மிகுந்தவராகி விடுவதைக் கவனித்தீர்களா? நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள்… நீங்கள் இங்கே யாருடனும் போர் புரிவதற்காக வரவில்லை. ஒருவரை அழித்தால், அடுத்தவர் தலை தூக்கிக் கொண்டு நின்றிருப்பார். உங்கள் ஆற்றலின் பெரும்பகுதி ஆக்கப்பூர்வமாய்ப் பயன்படாமல், அழிப்பதிலேயே வீணாகிவிடும்.அடுத்தவரை எதிரியாக நினைக்காதீர்கள்.
பொறாமைக்கும், அச்சத்துக்கும் இடம் கொடுத்தால் உங்கள் திறமைதான் மழுங்கிப்போகும். எனவே, நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் உங்களுக்காக இருக்கட்டும். இன்னொருத்தருக்கு எதிராக இருக்க வேண்டாம். அப்போதுதான், உங்களுக்கான சிகரத்தைச் சென்றடையும்வரை அந்தப் பயணம் ஆனந்தமாயிருக்கும்.
பொறாமைக்கும், அச்சத்துக்கும் இடம் கொடுத்தால் உங்கள் திறமைதான் மழுங்கிப்போகும். எனவே, நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் உங்களுக்காக இருக்கட்டும். இன்னொருத்தருக்கு எதிராக இருக்க வேண்டாம். அப்போதுதான், உங்களுக்கான சிகரத்தைச் சென்றடையும்வரை அந்தப் பயணம் ஆனந்தமாயிருக்கும்.