book

அன்புள்ள சின்னப்பபாரதிக்கு

Anbulla Chinnabharathikku

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கு. பாரதிமோகன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கல்வி
பக்கங்கள் :224
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788123416180
குறிச்சொற்கள் :பொதுஅறிவு, வினா-விடை, தகவல்கள், கவிதை
Add to Cart

அன்புள்ள சின்னப்பபாரதிக்கு ;தமிழ் , ஆங்கிலம் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும், கவிதை, சிறுகதை , புதினம் போல, கடிதமும் இலக்கிய உரு எடுத்து, அது எளிய நடையில் இருப்பதால், எல்லாத் தரப்பு வாசகத்தளங்களிலும் புகழ்பெற்ற நிலையை அடைந்துவிட்டது. அத்தகைய இலக்கிய வடிவத்துடன் இங்கே நூலூகியுள்ளது. மூதுத தோழர் சின்னப்ப பாரதிக்கு வந்த கடிதங்களின் தொகுப்பு ! அமரர் ஆர். கே. கண்ணன். இ.எம். எஸ். நம்பூதிரிபாடு, ஆர். நல்லக்கண்ணு, பிரகாஷ்காரத்  உள்ளிட்ட பொதுவுடமை இயக்கத் தோழர்கள் , இந்தியாவையும்,  வெளிநாடுகளையும் சோர்ந்த  பல்வேறு மொழி எழுத்தாளர்கள் எனப் பலர் பல்வேறு சூழ்நிலைகளில் எழுதிய  கடிதங்கள்  இவை. இவற்றுள் நெஞ்சைத்தொடும் ஈரமான நட்புக் கடிதங்களும்,  அறிவைத்தூண்டும் காரமான விமரிசனக் கடிதங்களும் அடங்கும். இவையெல்லாம் பதிப்புக்கான நோக்கில் எழுதப்படாமல், திடீரென மன உந்துதலினால் எழுதப்பட்டவையென்பதால் பலவற்றில் ஆங்காங்கே  கட்டுப்பாடற்ற உணர்ச்சிகளின் வீச்சு ! அத்துடன், பல கருத்துகள் சமூகச் சாடல்களாகவே இடம்பெற்றுள்ளன. சான்றுக்கு, 'சாகித்ய  அகாடமி விருது' பற்றிப் பலர் கடிதம் மூலம் வெளியிட்டிருக்கும் வெப்பத்தைச் சுட்டலாம். மேலும், சின்னப்பாரதி என்னும் ஆளுமையினை அறியாதவர் யாரேனும் தமிழுலகில்  இருந்தால்,  அவர்கள் அவரது அகத்தையும் புறத்தையும் ஒரு சில சதவிகித அளவில் இந்தக் கடிதங்களின் மூலமே அறிந்துகொள்ள முடியும்.

 

                                                                                                                                            - பதிப்பகத்தார்.