நான்காவது சிங்கம்
Sophies World
₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :செல்வராஜ் ஜெகதீசன்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :71
பதிப்பு :1
Published on :2012
ISBN :9789381969007
Add to Cartஅனுபவங்கள் முந்தைய காலத்திற்கு உரியவையாயினும் அவற்றைத் தனக்கேற்ற வெளிப்படுத்தலுக்கான வடிவமைப்பிற்குத் தயாராக்கிக்கொள்வதே வளர்ச்சியென்று கூறலாம். அது எந்தக் கலைக்கும் பொருந்தும் எனினும் கவிதைக்கு இன்னும் கூடுதலாய்க் கடந்த கணங்களில் சிலவற்றை, மூன்று தொகுப்புகளாய்க் கொடுத்திருக்கிற செல்வராஜ் ஜெகதீசன் நான்காவது சிங்கம் என வெளிப்பட்டிருக்கிறார். மூன்றாவது தொகுப்பிற்குப் பிறகு தனது தளத்தை, முதிர்நிலைக்குக் கடத்தியிருக்கிறார் என்றுதான் கூற வேண்டும். எழுதப்படாத, கவிதைப் பாடுபொருட்களைக் கண்டறிந்து, அவற்றைப் படைப்புக்குள் பிரதிநிதிப்படுத்துவது கவிஞருக்குப் பெரும் சவாலாக இருக்கிறது. இதையுணர்ந்து செயல்பட்டிருக்கிறார். ஏற்கெனவே யாராலோ சொல்லப்பட்ட அனுபவங்களும் இவருடையனவாகவே வெளிப்பட்டிருக்கின்றன. சாதாரண மனிதர்களுக்குச் சம்பவங்கள் யாவும் வெறுமனே கடந்துபோய்விடுகின்றன. அவற்றின் உறுத்தல் இடைவிடாமல் தொந்தரவு செய்யும்போது, கவிஞனுக்கு அவை பாடுபொருளாகி விடுகிறது. கவிஞருக்கு ஒரு எதிர்பார்ப்பு கூடுகிறது. அந்த எதிர்பார்ப்பு கவிதையாகிறது.