பூமியின் மேற்பரப்பின் மேல் சுற்றிலும் பல வாயுக்கள் சேர்ந்து ஒரு படலமாக உள்ளது. 110 கிலோமீட்டர் உயரம் செல்கையில் அது மிக மெல்லியதாகிவிடும். அதற்கு மேலே ஏதும் இல்லாத வெற்றிடமே. அந்த வெற்றிடத்தில் அங்கும் இங்குமாக தங்கள் சுற்றுவட்டப் பாதைகளில் சூரியன், சந்திரன் பிற கிரகங்கள் மற்றும் எண்ணில்லாத நட்சித்திரங்களும் இருக்கின்றன. இவையாவும் சேர்ந்ததைப் பேரண்டம் என்கிறோம். பூமியின் காற்று மண்டலத்துக்கு வெளியே இந்தக் காலியிடத்தை விண்வெளி என்கிறோம்.
100 மில்லியன் நட்சித்திரங்கள் இருக்கும் எனக் கருதப்படுகிறது .
நமது முன்னோர்கள் பல நூற்றாண்டுகளாக கற்பனையில் மட்டுமே கருத முடிந்ததைச் சாதித்து விட்டோம். இனுறு விண்வெளியில் பறக்க முடிகிறது. பூமியின் ஈர்ப்பு சக்தியை சமாளித்து ( மணிக்கு 28000 கிலோ மீட்டர் வேகத்தில் ) விண்வெளியில் மனிதன் எவ்வாறு பயணம் செய்ய முடிகிறது என்பதை இந்த நூல் விளக்குகிறது.முதலில் விண்வெளியிலிருந்து சுற்றிவந்தவர் ரஷ்ய விண்வெளிவீரர் யூரி காகரின்.முதலில் கால் பதித்தவர் அமெரிக்க விண்வெளி வீரர் ஆம்ஸ்ட்ராங் ஏவுகணைகளை விண்வெளியில் செலுத்துவது. செவ்வாய் மற்றும் பிற கிரகங்கள் பற்றியும் தெடர்ந்து ஆய்வுகளை நடைபெற்று வருகின்றன. விண்வெளி பற்றிய இந்த நூல் மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே நர்ர வரவேற்பைப் பெறும் என்பதில் சந்தேகமில்லை.
- பதிப்பகத்தார்.