திருவருட் பாவை இஸ்லாத்துக்கு ஒரு பாவைப்பாட்டு இல்லையே என்ற குறையைப் போக்குவதாக அமைந்துள்ளது. கவிஞர் வாழ்ந்த காலத்தில் புதுக்கோட்டையில் நடைபெற்ற இஸ்லாமியச் சிற்றிலக்கிய மாநாட்டில் அந்நூலைப்பற்றி ஓர் ஆய்வுக் கட்டுரை வழங்கினேன் திருவருட் பாவை பாடல்களைப் பண்ணிசைத்தும் பாடினேன். வாய்ப்பு நேரும்போதெல்லாம் அந்நூற் பெருமையைப் பேசி வந்தேன். அதனால் தனித்தமிழ்த் தென்றல் காரை - இறையடியான் பெரிதும் மகிழ்ந்தார் நெகிழ்ந்தார்.