தியாகிகள் நிறைந்த பூமியாகத் தஞ்சை மாவட்டம் விளங்குகிறது.தஞ்சை மாவட்டத்தில் வெறும் உணவுத் தானியங்கள் மட்டும் விளையவில்லை. நல்ல தலைவர்களையும், இழப்பதற்கு உரிமையைத் தவிர வேறு ஒன்றும் இல்லை என்ற நிலையில் இருந்த எண்ணற்ற வீர நெஞ்சம் படைத்த சின்னஞ்சிறு இளைஞர்களையும் இறுதியாக அந்த உயிரையும் சமூக விடுதலைக்காகத் துறந்த எண்ணற்ற எத்தனையோ உயிரையும் சமூக விடுதலைக்காகத் துறந்த எண்ணற்ற எத்தனையோ தியாகமறவர்களையும் பெற்ற புண்ணிய பூமியாகத் தஞ்சை மண் திகழ்கிறது. அதுமட்டுமல்லாமல் அவர்கள் உயிர் துறப்பதற்குக் காரணமாக இருந்த பண்ணையடிமை முறை, நிலப்பிருபுத்துவ முறை, காரணமாக இருந்த சமூக அடிமைத்தனத்தையெல்லாம் கண்டு கொள்ளாமல் அன்னியர்களாகிய ஆங்கிலேயர்களை விரட்ட வேண்டும் கொள்ளாமல் அன்னியர்களாகிய ஆங்கிலேயர்களை விரட்ட வேண்டும் என்ற எண்ணத்திலும் இந்திய தேசிய போராட்டத்தில் கூட யார் கலந்து கொள்ளவேண்டும் என்ற விதியையும் உருவாக்கி ஒரு சாராரை விலக்கி வைத்து தாங்கள் தான் இந்நாட்டின் தேச பக்தர்கள் என்று வரலாற்றில் வாழ்ந்து வருகிறார்கள்.