மாயூரம் விஸ்வநாத சாஸ்திரியின் இசையில், ஹம்ஸத்வனி ராகத்தில், திருக்குறள், பாரதியாரிலும், பாரதிதாசனிலும் பலவகை, நீலகண்ட சிவன், பாபநாசம் சிவன் இருவரின் பாடல்கள், திருப்பாவை, திருப்புகழ் ஆகியவற்றை அவர் பாடியது, ரசிகர்களை இசை வெள்ளத்தில் மூழ்கடித்தது.எல்லாவற்றிற்கும் சிகரமாக, ஹம்ஸானந்தி ராகத்தில் அமைந்த, பாரதிதாசனின், 'தமிழுக்கும் அமுதென்று பேர்' பாடலில், பேருவகை எய்திய இடங்கள் பல.பாமாலை என்ற சுப்பிரமண்ய பாரதியாரின் மகிமையைப் பாடும், பாபநாசம் சிவனின் பாடலில், 'தமிழ்நாடு செய்த தவப்பயனாய்' என்றவிடத்தில் நிரவல்; ராகம், தாளம், பல்லவியில் அமுது மட்டுமின்றி தமிழ் எவற்றுக்கெல்லாம் இணை என, அணுவணுவாக பிரித்துப் பாடிய விதம், நவசித்தி பெற்றாலும், பாடலின் பொருள் விளக்கம் போல் அமைக்கப் பெற்ற சங்கதிகள், ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டது.'தீர்த்தக்கரைதனிலே, பாயும் ஒளி நீ எனக்கு' ஆகிய பாடல்களில், கண்ணம்மாவைக் கொஞ்சியும், கெஞ்சியும் அழைத்த உணர்ச்சியின் வெளிப்பாடு, பாரதிதாசனின் நுாலைப்படி என்ற பெஹாக் பாடலின் முழு அர்த்தம் தொனிக்க வேண்டி, பல முறை வகைதொகையுடன் பாடிய நெறி ஆகியவற்றை கேட்டுக் கொண்டே இருக்கலாம்