நாம் முஸ்லிம்களாக வாழ்கிறோம்! ஐவேளை தொழுகிறோம், நோன்பு வைக்கிறோம், ஹஜ் செய்கிறோம், ஜகாத் கொடுக்கிறோம். சதகா கொடுக்கிறோம் எனவே நாம் சுத்தமான அக்மார்க் முத்திரையிடப்பட்ட முஸ்லிம்கள் ஆனால் அரசியல் ஒரு சாக்கடை அதில் பொய்யும், ஊழலும் மலிந்து காணப்படுகிறது. அரசியலில் நுழைந்தால் நாமும் அந்த சாக்கடையில் விழுந்து நாசமாகிவிடுவோம் எனவே நமக்கு அரசியல் தேவையில்லை என்று கூப்பாடு போட்டுத் திரியும் என் குல மக்களே! நீங்கள் சிந்திக்க வேண்டாமா?
அரசியலில் மட்டும்தான் பொய்யும், ஊழலும் மலிந்து விட்டதா? அப்படியெனில் உங்கள் வாழ்வில் நீங்கள் சொல்லும் சின்னச் சிறிய பொய்கள், நீங்கள் சுரண்டிய சொத்துக்கள் ஊழல் இல்லையா? இப்பாவங்கள் அங்கீகரிக்கப்பட்டவையா? அல்லாஹ் இதை மன்னிக்கப்பானா?