அண்ணாவின் கொள்கைகளை ஏற்று, அவரது வழிப்படி ஆட்சி நடத்திய பெருமைக்கு உரியவர் கலைஞர் அவர்கள். இந்நூல், கலைஞர் சிறுவயது முதலாகத் தன் இறுதிக் காலம் வரை பல்வேறு போராட்டங்களைச் சந்தித்த மாமனிதர் என்பதையும், கொள்கைக்காகவே வாழ்ந்த
செயல்வீரராக மக்கள் நலன் காத்திட உழைத்த அப்பண்பாளரைப் பலருக்கும் ஏன் பிடிப்பதில்லை என்பதையும், குறிப்பாக இந்நூலின் ஆசிரியரே கலைஞர் மீது வெறுப்புடையவராக இருந்து பின்பு, தான் உணர்ந்த உண்மைகளைக் கொண்டு தான் கலைஞரது தீவிர அன்பராக மாறியதையும் எடுத்துரைக்கிறது.