சிறுவர்களுக்கென்றே கதைகள் எழுத வேண்டும் என்ற உறுதியும், ஆர்வமும் கொண்டுள்ளவர் இந்நூல் ஆசிரியர். இவருடைய ஒவ்வொரு கதையிலும் ஏதாவது ஒரு புதிய செய்தியைக் குழந்தைகளுக்குத் தெரிவிப்பது உண்டு. அந்தக் காலத்தில், ஒவ்வொரு கதையிலும் ஏதாவது ஒரு நீதியைத் தெரிவிப்பது உண்டு. ஆனால் இந்த விஞ்ஞான உலகத்தில் எவ்வளவோ புதிய புதிய கண்டுபிடிப்புகளை,விஞ்ஞானிகள் கண்டுபிடித்து மனித வர்க்கத்தையே பிரமிப்பில் ஆழ்த்திக் கொண்டிருக்கின்றனர்.