சித்தர்களின் வாழ்க்கை முறை தனி. நினைத்த பொழுது உண்பார்கள்;
கிடைத்ததை உண்பார்கள்; உண்ணாமலும்கூட இருப்பார்கள். அவர்களைப் பற்றி
அவர்கள் கவலைப் படுவதே இல்லை. மனித குல மேம்பாடுதான் அவர்கள் சிந்தை
முழுதும் நிரம்பியிருந்தது. அதனால் தங்களைத் தேடி மக்கள் வர வேண்டுமென்று
எண்ணாமல் - காத்திராமல் மக்களைத் தேடி அவர்களே வந்தார்கள். சித்தர்களின்
யோக நெறிகளையும், வாழ்க்கை முறைகளையும், சிந்தனைகளையும், தத்துவ
போதனைகளையும் அறிந்து கொள்ள மக்கள் இப்போது பெரிதும் விரும்புகிறார்கள்.
அவ்வகைத் தகவல்களை திரட்டித் தருவதில் இந்நூல் முன்நிற்கிறது! சித்தர்கள்
பற்றிய தேடலில் ஈடுபட்டிருப் பவர்களுக்கு இந்நூல் இரை போடும்.