விகடன் இயர் புக்’ என்பது ஒவ்வோர் ஆண்டுக்கான தகவல் களஞ்சியம் மட்டும் அல்ல, பொக்கிஷமாகப் பாதுகாக்க வேண்டிய அறிவுக் கருவூலமும் ஆகும். 2013-ம் ஆண்டு முதல் ‘விகடன் இயர் புக்’ வெளியிடப்பட்டு வருகிறது. தமிழக மாணவர்கள், இளைஞர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் அத்தியாவசியமான ஒரு புத்தகமாகத் திகழும் விகடன் இயர் புக், ஆண்டுதோறும் மேன்மேலும் பரிணாமம் பெற்று வருகிறது. இந்த ஆண்டு பல புதிய தகவல்களையும் வழிகாட்டுதல்களையும் சிந்தனைக் கட்டுரைகளையும் தாங்கி விகடன் இயர்புக் வெளிவருகிறது. இனியவை இருபது, எனக்குப் புத்தகம் பிடிக்கும், மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி, ஐம்பது ஆண்டு கால தமிழ் சினிமாவில் பெண் ஆட்சியர்கள், மார்க்ஸ் 2.00, நிதியும் மதியும், தமிழக ஆளுநர்கள், குடியரசுத் தலைவர் தேர்தல்-2017, தமிழில் சிறை இலக்கியம் - ஓர் அறிமுகம் என அறிவை மெருகேற்றும் அனைத்து தகவல்களும் இதில் உள்ளன. மேலும், சமீபத்திய நூல்களும் ஆசிரியர்களும், பிக் டேட்டாவும் திக் டேட்டாவும், வெளிநாட்டில் வேலை, அறிவியல் நோபல் பரிசுகள் - 2017, சூப்பர் கிருமிகள்... இவை போல இன்னும் பல புதிய தகவல்களைக் கொண்ட களஞ்சியமாகத் திகழ்கிறது இந்த விகடன் இயர்புக் 2018. எதிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்; அதற்கு விகடன் இயர்புக் கரம் கொடுக்கும்!