உங்கள் விருப்பத்திற்கேற்ப மருத்துவ தகவல்களை, மருந்துக்ளைக் குறித்த செய்தியைத் தருவதற்காகத்தான் இதன் ஜந்தாம் பாகம்.ஆயுர் வேதம், சித்த மருத்துவத்தைப் போன்றது அல்ல நவீன மருத்துவம் , பாரம்பரிய வைத்தியம், என்று கூறும் பல்வேறு மருத்துவங்களும், மருந்துகளைக் குறிக்கும். மருத்துவ சிகிச்சை முறைகள் குறித்தும் மக்களுக்கு சரியான தகவங்களைத் தராமல் மூடி மறைக்கின்றன. மருத்துவத்திற்கு 'மூகமூடி தேவையில்லை. இத்தருணத்தில் நோயிலிருந்து கர்பணியைக்காக்கவும் வேண்டும். அவள் உட்கொள்ளும் மருந்துகளால் அவளுக்கும் வளரும் சிசுவிற்கும் பாதிப்பு ஏற்படாமலும் காக்க வேண்டும். முள்ளில் விழுந்த 'பட்டுச்சேலையை கிழிக்காமல் மெதுவாக எடுப்பது போல, இதனைச் செய்ய வேண்டும். எனவே , கர்பிணிகளுக்கு மிகவும் பாதுகாப்பான மருந்துகளையும் காக்க வேண்டும். எனவேதான் கர்பிணிகள் கண்டிப்பாக சுய சிகிச்சையில் ஈடுபடுத்தக்கூடாது. மருத்துவரின் ஆலோசனைப்படி தான் மருந்துகளை உட்கொள்ள வேண்டும். அதே போன்றே கர்பிணியைப் பாதிக்கக்கூடிய பல்வேறு நோய்களுக்கும், எந்த மருந்தைக் கொடுக்க வேண்டும்? எதைக்கொடுக்க கூடாது. எதை கவனமாகப் பயன்படுத்த வேண்டும் போன்ற தகவல்களைத் திரட்டி நூலாக்கித் தந்துள்ளோம். கர்ப்பமான, ஆகப்போகும் பெண்கள் அனைவருக்கும் இந்த நூல் வழிகாட்டியாக இருக்க வேண்டும்.
- முத்துச் செல்லக்குமார்.