இன்று நாமு மருத்துவத் துறையில் எவ்வளவோ வியத்தகு முன்னேற்றங்கள் பல அடைந்துள்ளோம் என்றாலும், சில வியாதிகளை முற்றிலும் குணப்படுத்த இயலாத நிலை. அப்படிப்பட்ட நோய்களில் ஒன்று தான் சர்க்கரை ஒஇயாதி என்ப்படும் நீரீழிவு நோய். முழுவதும் குணப்படுத்த இயலாவிட்டாலும் கூட, அதன் தீவிரத்தை முற்றிலும் கட்டுப்படுத்தி நீண்டக்காலம் நலமுடன் வாழும் வழிகளை, நோயாளிகளுடன் தனக்கு உள்ள தீண்ட அனுபவத்தின் மூலம் மிகச் சிறப்பாக விளக்கியுள்ளார் பிரபல மருத்துவ நிபுணர், திரு,சு.நரேந்திரன் அவர்கள்.நோயைப்பற்றிய விரிவான விளக்குமும், நோய்க்கான மருந்துகள், அதன் அளவுகள் தாமாக உபயோகித்துக்கொள்ளும் முறைகள் மற்றும் நோயாளிகளிக்கான உணவு முறைகள் , உணவுக்கட்டுப்பாடுகள், உடற்பயிற்சிகள், நோயைத் தடுக்கும் வழி என அனைத்து அம்சங்களும் இடம் பெற்றுள்ளது. மேலும் செய்திகள் முழுவதும் முழுமையான தமிழில் , தெளிவாகவும் எளிய நடையிலும் அமைந்திருப்பது நூலின் தனிச்சிறப்பு. இந்நூல் ஒவ்வொரு நீரீழிவு நோயாளிக்கும் உற்ற தோழன். மற்றவர்களும் இந்நோயைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள் ஏராளம் உள்ளன. படித்து பயன் பெறுங்கள்.
- பதிப்பகத்தார்.