ஒவ்வொரு இளைஞர்களின் உள்ளத்திலும் தங்களது வருங்கால மனைவி எப்படி இருப்பாள்? இவளது குணம், நிறம், அழகு,
படிப்பு, கலையம்சம் என்ன ? தங்களது குணம் அறிந்து செயல்படுவாளாழ தங்களது தாய் தந்தையரை மதித்து நடப்பாளா ? அவள்
வந்தபிறகாவது தங்களது தொழில் நிலை விருத்தியடையுமா என பலவித எண்ணங்கள் பளிச்சிடுவது இயல்பு. இதற்காக ஜோதிடர்கள்,குறி சொல்பவர்கள் முதலானவர்களைத் தேடி செல்லும் கூட்டம் ஏராளம். சுமார் நாற்பது ஜம்பது வயதானவர்கள் கூட தங்களது இல்லற வாழ்க்கையில் அதிருப்தியடைந்து ,தங்களது கணவன் மனைவியை விட்டுப்பிரிந்து வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு விடுகிறது. சில தம்பதியர் நல்ல பணவசதி, புத்திரபாக்கியம், சொந்த வீடு, மாளிகை கட்டி சிறப்புற்று வாழ்ந்தாலும், இவையனைத்தையும் அனுபவிக்க முடியாதபடி, நல்ல உணவை சாப்பிட முடியாதபடி கொடிய நோய்கள் வந்து தொல்லை கொடுத்து விடுகின்றன. இவ்வாறு தத்தளிக்கும் மனநிலையில் உள்ளோர் இந்நூலை சற்று ஆழ்ந்து படித்தால், தங்களது பிரச்சனைகளுக்குரிய கால கட்டம் எது. அதன்விடிவு காலம் எப்போது என்பது எளிதில் விளங்கிவிடும்.
- A. பிரகஸ்பதி .எம். ஏ. பி.ஏ.