"மாந்தர்தம் உள்ளத்தனையது உயர்வு" என்று தமிழ்மறை கூறுகிறது. "நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாக மாறுகிறாய்ம என்று சதுர்மறை கூறுகிறது.
இதே சத்திய தரிசனத்தை மேலைநாட்டு அறிஞர் ஜேம்ஸ் ஆலனும் பெற்றதன் விளைவே ஆங்கிலத்தில் அமைந்த இந்த இருநூல்கள்.
வ.உ.சி. தமிழில் மொழிபெயர்த்த இந்நூல்கள் வாழ்க்கை குறித்த தேடல் கொண்டவர்களுக்குப் பல புதிய வழித்தடங்களைப் புலப்படுத்தும். பல இரகசியத் தடயங்களை வெளிப்படுத்தும். வாழ்க்கையைத் திட்டமிட வழிவகுக்கும்.