அலெக்சாண்டர் ஃபிளெமிங், பென்சிலின் என்ற மருந்தை எப்போது கண்டுபிடித்தார்? ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் '' பொது சார்பியல் கொள்கை '' என்கிற சித்தாந்தத்தை எப்போது வெளியிட்டார். அறுவை சிகிச்சை செய்கிற போது மருத்துவர்கள் வாயையும் மூக்கையும் துணியால் மூடிக் கொள்கிறார்களே... இந்த வழக்கம் யாரால் வந்தது? இது மாதிரியான கேள்விகளை இனிமேல் நம்மை பார்த்து யாராவது கேட்டால் '' எனக்குக் கொஞ்சம் அவசர வேலை இருக்கு!'' என்று சொல்லி அவர்களிடமிருந்து தப்பிக்க வேண்டிய அவசியமில்லை! ''கொஞ்சம் இருங்கள்!'' என்று சொல்லிவிட்டு இந்தப் புத்தகத்தைப் புரட்டினால் போதும். . . விடை கிடைத்துவிடும்.