குறிஞ்சுப்பாட்டுத் தொடங்கி, குறள், ஊடாக, மணிமேகலை வரையுள்ள கருத்துப் பெட்டகங்களில் காணப்படும் சூத்திரங்களை ஆழமாக அலசிக் சொல்லும் இந்நூல். கற்பு குறித்த கையடக்கப் பதிப்பு, பதினெட்டு அறிஞர்களூடைய அலசல்களைத் தாங்கி கனத்து நிற்கிறது. வாசிக்கின்றவர்கள் மனத்தை ஓர் அங்குலமேனும் உயர்த்தும் நெறி நிறைந்த நூல்.
சிலப்பதிகாரத்தில் கானல் வரிகள் காவியத்தின் திசைதிருப்பிய முக்கிய நிகழ்வு. ஆசாரக்கோவையில், ''இல்லற ஒழுக்கம் என்பதே கற்புடன் வாழ்வதுதான் என்று கூறப்பட்டிருக்கிறது. குறுந்தொகையில், ''செம்புலப்பெயல்நீர் போல அன்புடை நெஞ்சம்தாம் கலத்தல்'' காலந்தாண்டி வாழும் வரிகள். அந்தக் காதல் வரிகள் இன்று கானல் வரிகளாக மாறிவிடக்கூடாது என்பதுதான் இந்தக் தொகுப்பின் நோக்கம்.