ஹரிச்சந்திரனின் சிறப்பம்சமான சத்தியங்களுக்கும் இந்நாவலில் இடம் உண்டு. எம்.ஏ.க்களின் சிறப்பம்சமான அசத்தியங்களுக்கும் இடம் உண்டு. வாய்மையே வெல்லும் என்று யாராவது கூறி கேட்கும்போதெல்லாம் வாய் மெய்யை வெல்லும்! என்று கூறுகிறாற் போல்தான் எனக்குத் தோன்றும், விரஜானும் அப்படியேதான் நினைக்கிறார் போலிருக்கிறது!