நம்மிடையே வாழ்ந்த, வாழ்கின்ற விஞ்ஞானிகளின் வாழ்க்கை வரலாறுகளை எளிய நடையில், இனிய தமிழில் 'அறிவியல் அறிஞர்' என்னும் தலைப்பிலே வெளியிட்டு, தெய்வத்திற்குச் சமமான குழந்தைகளின் முன் பணிவன்புடன் படைக்கின்றோம். பெற்றோர்களாகிய நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு இவ்வரிசை நூல்களை வரிசையாக வாங்கிக்கொடுத்து, அவர்களை அறிவியல் அறிஞர்களா ஆக்குங்கள். ஆகவே எங்கள் ஆசை.