நவீன தமிழகம்: மொழி, மதம், அடையாளம் நவீனகால தமிழ் உலகில் தோன்றி வளர்ச்சி பெற்று பல்வேறு இயக்கங்களும் பண்பாட்டு அரசியலும், குறிப்பாக மதம், மொழி, இனம், தேசியம் போன்ற இயக்கங்களைப் புரிந்து கொள்வதற்கு இங்கு ஐரோப்பிய காலனிய காலத்தில் நடைபெற்ற முக்கிய அறிவியல் கலாசார மாற்றங்களை கணக்கில் எடுத்துக் கொள்வது அத்தியாவசியம். இவ்வகைப் பின்புலத்தில்தான் தமிழ் கலாசார தத்துவ மரபுகள் எவ்வாறு நவீன காலத்தில் மறுகட்டமைக்கப்படுகின்றன என்று புரிந்து கொள்ள முடியும். இதற்கு ஒரு சிறந்த உதாரணமாக ஐரோப்பிய காலனிய ஆதிக்கமும் கிறித்துவ சமயப் பின்புலத்தில்தான் ஆரிய, திராவிட போன்ற இனம் சார்ந்த அரசியல் உருவாக்கத்தைக் கொள்ள முடியும்.
முனைவர் ரவி வைத்தீஸ்வரன் நவீனகால தமிழ்ச் சமூக வரலாறு. குறிப்பாக நவீனகால தமிழ்ச் சமூகத்தில் தோன்றிய பல்வேறு இனம், மொழி, மதம் சார்ந்த சீர்திருத்த, தேசிய அடையாள இயக்கங்களைப் பற்றிய ஆய்வுகளை பிரதானமாக மேற்கொண்டவர். டொரோண்டா பல்கலைக் கழகத்தில் நவீன தெற்காசிய வரலாற்றுத்துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். மனிடோப பல்கலைக் கழகத்தில் 15 ஆண்டுகள் வரலாற்றுத்துறை பேராசிரியராகப் பணிபுரிந்தவர். சர்வதேச ஆய்வு பத்திரிகைகளில் பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதியவர். இவருடைய நூல்: Religion, Caste, and Nation in South India: Maraimalai Adigal, The Neo-Saivite Movement, and Tamil Nationalism, 1876-1950 (Delhi : Ondfond University Press 2015 முனைவர் ரா.ஸ்தனிஸ்லாஸ் திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரியில் வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். இவர் சென்னைப் பல்கலைக்கழக இந்திய வரலாற்றுத்துறையில் முனைவர் பட்டத்தைப் பெற்றவர். திருவண்ணாமலை மாவட்டம் பெருமனம் என்ற கிராமத்தில் பிறந்தவர். இரண்டு மாநில கருத்தரங்கு களையும், ஒரு தேசிய அளவிலான கருத்தரங்கு மற்றும் ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கையும் நடத்தியுள்ளார்.