துளசி,பாரத தேசத்தில் மக்கள் மத்தியில் தனித்த பெருமதிப்பையும்,பெருமையையும் பெற்ற மூலிகைச் செடியாகும். துளசிக்கு உள்ள மற்றொரு தனிச் சிறப்பு இதற்குள்ள ஆன்மிக மகத்துவந்தான். வேதங்களிலேயே துளசி பற்றிய கறிப்பு உள்ளதாக்க் கூறப்பட்டுகிறது. பாரத தேசத்து இந்து மதம் தழுவிய சாஸ்திரங்கள்,புராண இதிகாசங்களில் துளசியின் பெருமையும்,மகத்துவமும் பரவலாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. துளசி, திருமகளாம் இலட்சுமி தேவியின் அம்சமாகக் கருதப்படுகிறது. தமிழகத்தில் - பொதுவாக தென்னகத்தில் தெய்வீக அம்சம் பொருந்தியதாகக் கருதி வழிபட்டு வருகிறார்கள்.