இன்று விஞ்ஞானத்தின் வளர்ச்சி மனிதனின் மூளைக்கு எத்தனை ஆற்றல் உள்ளது என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறது. இது போதாது.
இன்னும் நாம் நிறைய செய்ய வேண்டும். சாதனை படைக்க வேண்டும் என்ற துடிப்பு இன்று மாணவப் பருவத்திலேயே துவங்கி விடுகிறது எனலாம்.
முன்பு மாணவர்கள் பள்ளி பாடப் புத்தகத்தைத் தவிர வேறு எதையும் அறியாதவர்களாகத் தான் இருந்தார்கள். இன்று தொலைக்காட்சி பார்ப்பது புத்தகங்கள் படிப்பது இவற்றின் மூலம் இது மிகக் குறுகிய வயதிலேயே பல்வகையான அற்புதச் செயல்களையும் தெரிந்துகொண்டு சிந்திக்கத் துவங்கி விடுகிறார்கள்.
இத்தகைய மாணவர்களுக்கும் புதிதாக ஏதாவது சாதனை படைக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்களுக்கும் இந்த ‘எல்லோரும் அறிய வேண்டிய அரிய தகவல்கள்’ என்ற புத்தகம் ஒரு பெரிய வரப்பிரசாதமாக இருக்கும். அந்த அளவுக்கு மிக மிக அற்புதமான செய்திகளையெல்லாம் ஆசிரியர் மிகவும் சிரமப்பட்டு தொகுத்துத் தந்துள்ளார்.