
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.40

Free shipping over ₹500
450
ஆண்டுகளுக்கு முன்பு பிரான்ஸில் நாஸ்ட்ரடோமஸ் என்றொருவர் இருந்தார்,
அடிப்படையில் ஜோதிடர்தான் ஆனால் அதனையும் மீறி வருங்காலத்தை மிக துல்லியமாக
சொல்லும் ஆற்றல் அவரிடம் இருந்தது.
அவர்
யூத வம்சாவளி, என்னதான் ஒரே கடவுள் , எங்கள் சொந்த கடவுள் ஜகோவா என்றாலும்
யூதர்களுக்கு கபாலா எனப்படும் அதர்வண வேத சாயலும், ஜோதிடத்தின் மேலும்
அபார நம்பிக்கை உண்டு
மாமன்னன்
சாலமோன் அதில் கரை கண்டிருந்தார், அவர் மிகபெரும் ஜோதிட நம்பிக்கை உள்ளவர்
என்பதும். இன்று இஸ்ரேலியர் அடையாளமாக வைத்திருக்கும் நட்சத்திரம் என்பது
அவர் உருவாக்கிய ஒரு மாதிரி தாயத்து யந்திரம் என்பதெல்லாம் வரலாறு
அப்படிபட்ட
யூத வம்சத்தில் வந்த ஜோதிடர் நாஸ்டரடாமஸ், கோள்களின் அசைவினை வைத்து
கண்ணில் பட்ட மிருகம் முதல் நாடுகளின் எதிர்காலம் வரை மிக துல்லியமாக
கணிக்கும் ஆற்றல் இருந்தது
எதிர்கால
உலகினை மிக துல்லியமாக கணித்தார், அதாவது அமெரிக்க வல்லரசு உருவாவது,
போப்பாண்டவர் வீழ்ச்சி, நெப்போலியன் எழுச்சி, உலகப்போர்கள், பின்லேடன் (அது
பற்றிய சர்ச்சை உண்டு), ஹிட்லர், கோமேனி, சோவியத் யூனியன் வீழ்ச்சி,
அறிவியல் முன்னேற்றம் , அணுகுண்டு, மூன்றாம் உலகப்போர் என அடுத்த 1000
ஆண்டுகளை சொல்லி சென்றவர்.