ஒரு வாரம் வெண்பனி சற்று உருகி வந்தது. ஆனால் இப்பொழுது இலேசாக வீசிய காற்று, இளகிய வெண்பனிப் பெருக்குகள் இறுகப் போதுமானதாய் இருந்தது. இரவு வானத்தில் விண்மீன்கள் குளிரொளி பரப்பிக் கண் சிமிட்டின. பசியின் கனல் வீசும் ஓநாய்க் கண்களையொத்த பச்சைப் பொறிகள் ஜொலிக்க நிலவொளியில் வெண்பனிமாயமாய்ப் பளிச்சிட்டது.