2020 வது வருடம் கொரானா எனக்கு 15-க்கும் மேற்பட்ட கதைகளை கொண்டு வந்தது.
கூடவே கதைகளின் கதாப்பாத்திரங்கள் என் துணிச்சலையும் சோதித்தது. இருந்தும்
இணங்கிப் போகாமல் நானும் கதை மாந்தர்களும் இதிலிருந்து நீந்தி
வெளியேறியிருக்கிறோம். நான் வேலை பார்க்கும் நிறுவனத்தின் கிளை ஊர்ப்
பக்கமிருந்தது. தினமும் அங்கு சென்று கையெழுத்திடுவதும் மாலை நான்கு
மணிக்கெல்லாம் கிளம்பி வந்து கிரிக்கெட் விளையாடுவதும் , இருட்டிய பின் கதை
எழுத அமர்வதுமாக உற்சாகமாக ஓடியது நினைவுக்கு வருகிறது.