பக்தி இலக்கியங்களில் உள்ள நான்கு வகையான வேதங்களில் ரிக், யசூர், சாம, அதர்வண வேதங்கள்காணப்படுகின்றன. இந்த வேதங்களில் நான்காவது வேதங்களான அதர்வண வேதமானது ரிக், யசூர், சாம வேதத்திற்கு எதிராக செயல்படக்கூடியதாகவும் பல தீய சக்தியான அமானுஷ்ய சக்தியை பரப்பக் கூடியதாகவும் இதனால் பல நல் சக்திகளை உலாவ விடாமல் இந்த பூமியை நகரமாக்கி வேடிக்கைப் பார்த்து இன்புறும் சக்தியைப் வெளிப்படுத்துகிறது இந்நாவல்.
இப்பூமியில் உள்ள சமயங்களை அடிப்படையாகக் கொண்டு பல கடவுள் தோன்றியுள்ளன. தோன்றவும் செய்கின்றன. எவ்வளவுக்கு எவ்வளவு கடவுள் சக்தி இப்பூமியை ஆட்சி செய்கிறதோ அதற்கு முரணாக பல தீய சக்தியும் போராடக்கூடியதாக உள்ளது. அந்த அடிப்படையில் ஆண்டி கிரைஸ்ட் ஐலேண்ட் என்ற நாவலில் உள்ள கருத்துக்களும் மத ரீதியான அதாவது மத பிரச்சினையைத் தூண்டக்கூடியதாக அல்லாமல் ஒவ்வொரு மதங்களில் காணப்படுகின்ற கடவுள் சக்தியோடு அதற்கு நிகராக பல அந்நிய சக்திகளும் இயங்கிக்கொண்டிருக்கின்றது என்பதையும் வெளிப்படுத்துகிறது
ஆன்ட்டி கிரைஸ்ட் இந்த வார்த்தை பைப்பிளில் இருந்து எடுக்கப்பட்டது தான். நீங்கள் எப்படி ஆன்ட்டி கிரைஸ்ட்டை வெறுப்பீர்களோ நானும் அப்படித்தான். மற்ற மதங்களிலும் கடவுளுக்கு எதிரான இவனைப் போன்ற ஆட்கள் உண்டு. இது முழுக்க, முழுக்க என் கற்பனையில் ஆன்ட்டி கிரைஸ்டை செய்த கதைதான்.