'உயிர் தேடும் உள்ளங்கள்' என்ற இந்தப் படைப்பு குறுநாவல் வகையைச் சார்ந்தது. சிறுகதை, குறுநாவல், தொடர்கதை,நாவல் இந்த நான்குக்கும் வேற்றுமைகள் ஆயிரம் இருந்தாலும்கூட ஒன்றுமைக்குக் கூறு ஒன்றே ஒன்றுதான் உள்ளது. அதுதான் விறுவிறுப்புத் தன்மை.
சிறந்த திரைப்படத்துக்குரிய கதையினைக் கொண்டுள்ளது இந்தக் குறுநாவல், படிக்கும்போதே மனக்கண்களுக்கு முன்னால் சுவாரஸ்யமான திரைப்படம் ஓடுவதை வாசகர்கள் உணர முடியும். அது இந்தக் குறுநாவலின் விறுவிறுப்புத் தன்மையால் விளைந்ததே ஆகும்.