"கவிபாரதி சிறுவர் பாடல்கள்" என்னும் இந்நூல் குழந்தைகளுக்கான நற்றமிழ்க் கவிதைகளைக் கொண்ட நன்னூல்; போற்றத் தகுந்த பொன்னூல். கரும்பை மென்று சுவைப்பது போல, அத்தளை கவிதைகளையும் ஆழ்ந்து படித்தேன்; அணுகிப் படித்தேன்; நுணுகிப் படித்தேன்.இன்று கட்டித் தங்கமாய் உள்ள சுட்டிக் குழந்தைகள், நாளை நமது வீட்டுக்கும் நாட்டுக்கும் அணிகலனாகத் திகழ வேண்டும் என்னும் கருத்தைப் பாடுபொருளாக வைத்து இச்சிறு நூலைப் படைத்துள்ளார் நூலாசிரியர் திரு ப.தமிழ்செல்வன் அவர்களைப் பெரிதும் பாராட்டுகிறேன்.
இந்நூலாசிரியர் அரசு விருது பெற்ற நல்லாசிரியர். கற்பிக்கும் பணியில் அவருக்குள்ள அனுபவமும் பள்ளிக் குழந்தைகளுக்கு அறிவியலையும், சமூகவியலையும் இயற்கை மீதான காதலையும், இயற்கையோடு இயைந்த வாழ்வியலையும் எளிய நடையில் இனிய தமிழ்ப்பாடல் வடிவில் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஆவலும் அவரது கன்னி முயற்சியான "கவிபாரதி சிறுவர் பாடல்கள்" என்ற இப்பாடல் தொகுப்பில் பல இடங்களில் கனியிடை ஏறிய சுனைகளாக மினிர்வதைக் காண்கிறோம். இதில் தொகுக்கப்பட்ட பாடல்களில், "கீச்சு கீச்சு சுண்டெலி" என்ற பாடல் தினமணியின் சிறுவர்மணி நாளிதழில் வெளிவந்து சிறுவர்களிடம் வரவேற்பினைப் பெற்றதாக அறிகிறோம். பொதுவாக உலகம் முழுவதும் குழந்தைகளுக்கான இலக்கியங்கள் குறிப்பாகப் பாடல்கள் குழந்தைகளிடையே மொழியினை அறிமுகப்படுத்தும் விதமாகவே அமைக்கப்படுகின்றன. எனவே, அவை கருத்துச் செறிவில் கவனம் செலுத்தாமல் சந்தம் நிறைந்தவையாகவே அமைக்கப்படுகின்றன.
இந்நூலாசிரியர் சந்தக்கட்டுகளில் மட்டும் கவனம் செலுத்தாமல் கருத்துச் செறிவிலும் கவனம் செலுத்தியுள்ளதைக் காண்கிறோம். பிஞ்சு மனதில் விஞ்ஞான சிந்தனைகளை விதைக்க வேண்டும் என்ற இந்நூலாசிரியரின் தாகம் முதல் பாடலாக தொகுக்கப்பட்டுள்ளது