'டமால் டுமால் பட்டாசு ' எனும் குழந்தைப் பாடல் நூலின் ஒவ்வொரு பக்கத்தைத் திருப்பும்போதும், உங்களின் கற்பனைச் சிறகு விரிந்து உயரப் பறப்பதை உணர்வீர்கள். மண்ணைப் பிளந்து வரும் வீரியமிக்க விதைகளாய் குட்டிக் கவியரசர்களின் அணிவகுப்பாக வலம் வருகிறது இப்புத்தகம் எனவே, ஒரு வசதியான இடத்தைப்பிடித்து, இந்த மயக்கும் கவிக்கோர்வையில் மூழ்குங்கள். வாசிப்பின் மகிழ்ச்சி வரம்பற்றது!
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் குழந்தைகளின் சிந்தனைத் திறனை அடிமைப்படுத்திக் கொண்டிருக்கும் சூழலில் குழந்தைகளை வாசிப்பு உலகத்திற்கு அழைத்துச் சென்று இளம் படைப்பாளர்களாக மாற்ற எடுத்த முயற்சிக்கு வெற்றி கிடைத்திருக்கிறது. வாழ்த்துக்கள் இளம் படைப்பாளர்களே! தொடுக புகழின் உச்சம்!