ஒரு பெண்ணின் அந்தரங்கக் குறிப்புகள் 'என் தாம்பத்திய வாழ்க்கையின் குறிப்பிடத்தக்க பகுதியாகும். எனக்கே சொந்தமான, நான் மட்டுமே எண்ணி மகிழ வேண்டிய அனுபவங்களை உங்களோடு பகிர்ந்துகொள்ள முன்வந்திருக்கிறேன் என்றால், கணவனோடு நீங்கள் நடத்துகின்ற வாழ்க்கை இன்பமயமானதாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். குடும்ப வாழ்க்கையை சொர்க்க பூமியாக்குவதும்,நரக வேதனை ஆக்கிக்கொள்வதும் முழுக்க பெண்ணைப் பொறுத்த விஷயமே; என் அந்தரங்க அனுபவங்களை ஒளிவு மறைவு இன்றி சொல்லியிருக்கிறேன். அன்புச்சகோதரிகளாகிய உங்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதற்காக ;