வானத்தின் ஆழ நீலத்தில் அமிழ்ந்து போகிறேன். மேகங்களோடு நீச்சலடிக்கிறேன். அலைகளோடு சேர்ந்து கும்மி கொட்டுகிறேன். செருப்பில்லாத பாதங்களோடு புல்வெளிக்குப் போய்வருகிறேன். பூக்களோடு சிநேகமாயிருக்கிறேன். இசையில் கரைகிற போது எனக்குச் சிறகு முறைப்பதாய் நினைக்கிறேன். நல்ல கவிதைகளில் வாக்கியங்களில் இடைவெளியில் காணாமல் போகிறேன். சில நேரங்களில் நிமிடத்திற்கு எத்தனை முறை சுவாசிக்கிறேன் என்று எண்ணிக் கொண்டிருப்பேன்.
முத்துச் சிற்பிக்குள் நட்சத்திரங்கள் மாதிரி கவிதையின் உள்ளடக்கத்தில் சில சோதனை முயற்சிகள்.