ஆர்வமூட்டும் மொழியும் எளிய நடையும் கொண்ட இவை சங்க இலக்கியம் தொடங்கி நவீன இலக்கியம் வரைக்குமான பதிப்புப் பிரச்சினைகளைப் பேசுகின்றன. தனிமனிதத் தாக்குதலை முற்றிலுமாகத் தவிர்த்துக் கருத்துத்தளத்தில் விவாதங்கள் முன்வைப்பதும் எதிர்கொள்வதுமான நோக்கோடு எழுதப்பட்டுள்ள இக்கட்டுரைகள் பல்வேறு எதிர்வினைகளைப் பெற்றதோடு பதிப்புணர்வை உருவாக்குவதிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைக் செய்தவை.