அன்புடன் எழுதிக்கொள்வது. நான் இலங்கையிலிருந்து இக்கடிதம் எழுதுகின்றேன். திருமதி. ரமணிசந்திரனின் முத்தான நாவல்களை வாசிக்கும் லட்சக்கணக்கான வாசகிகளில் நானும் ஒருத்தி. அவரின் அநேகமான நாவல்கள் புத்தக வடிவில் உங்களது அருணோதயம் வெளியீடாக வந்துள்ளது. ஏனைய எழுத்தாளர்களின் நாவல்களைவிட ரமணிசந்திரனின் நாவல்கள் என்றால் எனக்கு உயிர். நான் கூடுதலாக விரும்பிப் படிப்பதே இவரது படைப்புக்களைத்தான். கிட்டத்தட்ட 45 நாவல்கள் படித்துவிட்டேன். எனக்கு அவரது நாவல்கள்தான் உற்றதுணை, அவற்றைப் படிக்கின்ற போது ஏற்படுகின்ற மகிழ்ச்சி, நிம்மதி வேறெதிலுமே கிடைப்பதில்லை. அதிலே காணும் மனநிறைவு. அதை எப்படி வார்த்தையில் சொல்லிவிட முடியும்.
மேலும், தற்சமயம் உங்கள் வெளியீடுகளில் எழுத்துக்கள் மிகவும் பெரியனவாக நன்றாக உள்ளது. பழைய வெளியீடுகளில் எழுத்துக்கள் சிறியவையாக இருந்தன. வையாக இருந்தன. இப்போ வருபவை நல்ல அழகாக உள்ளன. நான் புத்தகம் வாங்குமுன் அருணோதயம் வெளியீடா எனப் பார்த்துவிடுவேன். உங்கள் வெளியீட்டில் வரும்போது நாவல்கள் ஒரு தனி அழகைப் பெறுகின்றது. ஐஸ் வைக்கிறேன் என்று எண்ணாதீர்கள் முற்றிலும் உண்மையே. மற்றவர்களிடம் கேட்டுப் பாருங்கள்.