கையின் வளர்ச்சியுடன், உழைப்புடன் இயற்கையின் மீது ஆளுமை கொள்வது தொடங்கியது.ஒவ்வொரு புதிய முன்னேற்றத்தோடும் மனிதனுடைய அறிவெல்லை விரிவாகி வந்தது. இயற்கைப் பொருட்களின் அதுவரை அறியப்படாமல் இருந்த புதிய பண்புகளைத் தொடர்ந்தாற்போல அவன் கண்டுபிடித்துக் கொண்டிருந்தான். மற்றொரு புறம்,பரஸ்பர ஆதரவு, கூட்டுச் செயல் என்பதற்கான வழக்குகளைப் பெருக்கியும்,ஒவ்வொரு தனிநபருக்கும் இவ்வித கூட்டுச் செயலின் நல்லாதாயத்தைத் தெளிவுபடுத்தியும் சமூக உறுப்பினர்கள் நெருங்கிக் கூடிவர உழைப்பின் வளர்ச்சி அவசியமாகவே உதவி புரிந்தது.