நூலாசியர் ந.முத்துமோகன் தமிழகத்தில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க தத்துவ அறிஞர்களுள் ஒருவர்.தத்துவம்,சமயம், பண்பாடு,தலித்தியம்,பெண்ணியம், அமைப்பியல்,பின் அமைப்பியல் ஆகியவற்றை மார்க்ஸிய ஒளியில் அணுகுபவர். மேடைகளிலும், ஏடுகளிலும் முழு வீச்சுடன் முற்போக்குக் கொள்கைகளை உரைத்து வருபவர்.சாதிய விமரிசனம், சுய மரியாதை, பெண்ணுரிமை போன்ற கூறுகளை ஜீவா எவ்வாறு பண்பாட்டுச் சிக்கல்களாக நோக்கினார் என்று விளக்குகிறது இந்நூல்,