காந்தியடிகளைப் பற்றி முதன் முதலாக ஆவணப்படம் தயாரித்தவர் ஏ. கே. செட்டியார். இதற்காக அவர் பல்வேறு மேலைநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற் கொண்டார். ஜப்பானிலிருந்து அமெரிக்காவுக்கும் அயர்லாந்துக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் தென்னாப்ரிக்காவுக்கும் சென்று வந்தார். அவ்வப் போது தனது அனுபவங்களை பல்வேறு பத்திரிக்கை களில் பயணக் கட்டுரைகளாக எழுதி வந்தார். அக்கட்டுரைகளை தொகுத்து இரண்டாவது சக்தி மலராக 1940இல் சக்தி காரியாலயம் ‘உலகம் சுற்றிய தமிழன்’ என்ற நூலாக வெளியிட்டது.
தமிழில் வெளிவந்த பயண நூல்களில் ‘உலகம் சுற்றிய தமிழன்’ ஒரு முன்னோடி நூல் மட்டுமல்ல. உலக வரலாற்றை, எளிய மொழியில் எடுத்துரைக்கும் வித்தியாசமான நூல்.
ஏ.கே. செட்டியாரின் மொழி லாவகம் அலாதியானது; அற்புதமானது; ரசிக்கக்கூடியது. ஒரு நாட்டின் அல்லது ஒரு இனத்தின் ஜீவநாடியை ஓரிரு வரிகளில் பதிவு செய்யக்கூடிய ஆற்றல் ஏ.கே. செட்டியாருக்கு மட்டுமே வாய்த்திருக்கிறது.