
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.39

Opening the world of stories

Ethu Unn Kurikoal
Free shipping over ₹500
✓ Ready to ship
இயற்கை விவசாயம் சுற்றுச்சூழல் போன்றவற்றில் அதிக அக்கறை கொண்ட எழுத்தாளர் பசுமைக்குமார். தமிழகம் நன்கறிந்த பத்திரிகையாளர். மொழிப்பெயர்ப்பாளர், கவிஞர், சிறுகதை எழுத்தாளர்.
சிறந்த எழுத்தாளர் விருது, இயற்கை விவசாய விழிப்புணர்வு பணிக்கான சாதனையாளர் விருது. மற்றும் சிறந்த கட்டுரையாளர் விருது, சிறந்த சிறுகதையாளர் விருது பெற்றவர்.
குறிக்கோள் இல்லா வாழ்க்கை திசை தெரியா பயணம் ஆகிவிடும். வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் குறிக்கோள் தேவை. அது குறுகிய கால குறிக்கோளாகவும் இருக்கலாம். நீண்ட கால குறிக்கோளாகவும் இருக்கலாம். அவற்றை நிறைவேற்ற உரிய திட்டம் வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்றி முடிக்க வேண்டும்.
ஒவ்வொருவருடைய முன்னேற்றத்திற்கும் குறிக்கோளை இர்ணயித்துக்கொள்வது இன்றைய காலத்தின் தேவை. குறிக்கோளை எப்படி நிர்ணயிப்பது, எப்படி நிறைவேற்றுவது, அதற்கான தொழில்நுட்பங்கள் என்னென்ன என்பது பற்றி தெளிவாக விளக்குகிறது இந்நூல். ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பொதுவான வாசகர்கள் ஒவ்வொருவர் கையிலும் இருக்க வேண்டிய நூல் இது.