துரை மாநகராட்சி பள்ளிகளின் நூலகங்களுக்கு புத்தகங்கள்
வினியோகிக்கப்பட்டன.மாநகராட்சியின், 9 உயர்நிலைப்பள்ளிகள், 15
மேல்நிலைப்பள்ளிகளின் அறிவுத்திறனை மேம்படுத்த, ஒரு பள்ளிக்கு 150
புத்தகங்கள் வீதம், 3,600 புத்தகங்கள் வழங்கும் விழா, நேற்று நடந்தது.
கல்வி நிதியிலிருந்து, ரூ.2 லட்சத்து 40 ஆயிரத்தில், அதற்கான
ஏற்பாடுகள்
மேற்கொள்ளப்பட்டது. மேயர் ராஜன் செல்லப்பா, கமிஷனர் நந்தகோபால், துணை
மேயர் கோபாலகிருஷ்ணன், மண்டலத் தலைவர் ராஜபாண்டி, கல்வி அலுவலர்
மதியழகுராஜா, உதவி கமிஷனர் தேவதாஸ், கல்விக் குழுத்தலைவர் சுகந்தி
பங்கேற்றனர். நூலகங்களுக்கு வழங்கப்பட்ட புத்தகங்களில், கமிஷனர் நந்தகோபால்
எழுதி, காந்தி மியூசியத்தில் சமீபத்தில் வெளியிட்ட, "வளையாத பனைகள்'
புத்தகமும் இடம்பெற்றிருந்தது.