அதைத்தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர் ஏ.சவுந்தரராஜன் எம்.எல்.ஏ. மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ. ஆகியோர் நேற்று காலை 10.30 மணி அளவில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்தனர். அவர்களை அமைச்சர்கள் 4 பேரும் வாசலில் நின்று வரவேற்று அலுவலகத்திற்குள் அழைத்துச்சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இந்த பேச்சுவார்த்தை சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றது. பேச்சுவார்த்தை முடிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் காலை 11.30 மணிக்கு வெளியில் வந்தனர். அவர்களுடன் அமைச்சர்கள் 4 பேரும் வந்து அவர்களை வழியனுப்பி வைத்தனர்.
அப்போது மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த