நூலாசிரியர் வேணுசீனிவாசன் தற்போது கல்பாக்கம் அணுவாற்றல் துறை
மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். குழந்தை எழுத்தாளர் சங்கப் பரிசு,
அமரர் ராமரத்தினம் நகைச்சுவைக் குறுநாவல் போட்டிப் பரிசு, வானொலி
நாடகவிழாப் பரிசு, 'மகாத்மா மாற்றினார்' என்ற சிறுவர்கதைக்காக வள்ளியப்பா
இலக்கிய வட்டப் பரிசையும் வென்றிருக்கிறார்.'சுற்றுச்சூழல் - மாசு
விளைவுகளும் விழிப்புணர்வும்' எனும் இவரது நூல் 2013ஆம் ஆண்டில் சிறந்த
தமிழ் நூலுக்கான தமிழக அரசின் விருது பெற்றது இவரது ஆன்மீகக் கட்டுரைகள்
ஞான ஆலயம், சப்தகிரி, காமகோடி, அம்மன் தரிசனம் ஆகிய மாத இதழ்களில் வெளியாகி
வருகின்றன. மருத்துவக் கட்டுரைகளை குமுதம் ஹெல்த் ஸ்பெஷல் வெளியிடுகிறது.
அறிவியல் கட்டுரைகளை அதிக அறிவியல், கலைக்கதிர், மேதை, ஆகிய இதழ்கள்
வெளியிட்டுள்ளன. மஞ்சரி மாத இதழில் இவரது பல்சுவைக் கட்டுரைகள் இருபத்து
ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக வெளியாகி வருகின்றன. சுட்டி விகடனில் இவரது
சிறுவர் கதைகள் வெளியாகின்றன. பத்து வருடங்களுக்கு மேலாக சென்னை வானொலியில்
சுற்றுச்சூழல் சிந்தனைகள் பகுதியில் இவரது கருத்துக்கள் ஒளி உலா
காண்கின்றன. இதுவரையில் இவர் எழுதிய 86 புத்தகங்களை பல பதிப்பகங்கள்
வெளியிட்டுள்ளன.