வானத்திற்கு எல்லை இல்லை. மனிதனின் கண்டுபிடிப்புகளுக்கும் எல்லையில்லாமல் புதிய புதிய கண்டுபிடிப்புகள்
வந்துகொண்டேயிருக்கின்றன. ஏர். -மாடுகள் இல்லாத விவசாய விளைச்சல், விறகில்லாத அடுப்புச் சமையல் , புத்தகங்கள் இல்லாத கணினிக்கல்வி என்று மாறிக்கொண்டே வருகிறது. முன்பு தொலைப்பேசித் தொடர்பின்போது கதிர் முனையில் இருப்பவர்கள் எங்கிருந்து பேசுகிறூர்கள் என்று கேட்பார்கள். இப்போது எதிர் முனையில் இருப்பவர்களிடம் எங்கிருக்கிறூர்கள் என்று கேட்கும் நிலை குறுகிய காலமாற்றம் குறுகிய கால முன்னேற்றம் - செல்லும் திசையெல்லாம் செல்போன் பயன்படுகிறது . விண்வெளி விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் தனிதனுக்குச் செயற்கைச் சிறகுகளை உருவாக்கிப் பறக்கத் தூண்டிக்கொண்டுருக்கின்றன. பறவைகள் ஒரு குறிப்பிட்ட எல்லைவரைதான் பறக்கும். ஆனால் மனிதன் எதுவரை பறந்து அறிவியல் உலகுக்கு அரிய செய்திகளைக் கொடுக்கப்போகிறான் என்பதைக் காலம்தான் கணித்துக் கூறும். ஆனால் பறக்கலாம் வா' என்னும் இந்நூல் நிச்சயமாக உங்களை விஞ்ஞானியாக்கி விண்ணில் பறக்கத்தூண்டும்.
- பதிப்பகத்தார்.