கவிஞனின் கவிதையை ரசித்தால்வாசியுங்கள் மீண்டும் மீண்டும்.. வார்த்தைக்கு வார்த்தை அப்படியேமனப்பாடம் செய்துகொள்ளுங்கள் அடிக்கடி நினைவுபடுத்திப் பாருங்கள்திறந்த வெளியில்மேற்கூரையில் தனியாக நின்றுதனக்குத் தானேசொல்லிப்பாருங்கள்
ஆனால் வேண்டாம்அந்தக் கவிஞனைநேரில் சந்திக்கும் முயற்சிகள் வேண்டவே வேண்டாம்.அப்படியே எப்போதாவதுசந்திக்க நேர்ந்தால்...... கவிதை மீதான உங்கள் ரசனைமுட்டை ஓடுகளைப் போலஉடைந்துவிடக்கூடும்!