குடும்ப முன்னேற்றம் நாட்டின் முன்னேற்றம். முன்னேற்றம் உடைய குடும்பம் எப்படி இருக்கும் என்பது பற்றிய என் எண்ணந்தான் இந்தச் சிறிய நூல்.நல்ல குடும்பம் பல்கலைக் கழகம்! இந்நாளில் சிறிது கூடுதலான வருவாய் ஏற்பட்டவுடன் துணைவியர் உடல் நலங்காமல், உடை நலங்காமல் வேளைக்குச் சாப்பிடுவதுதான் குடும்ப ஒழுக்கம் என்று நினைத்து விடுகிறார்கள். பெண்களிடமிது பெரு வழக்கமாகி வருகிறது. கணவன்மாரும் இந்நிலை முழுத்தன்மை வாய்ந்தது என்று முடிவு கட்டுகிறார்கள்.