வைணவம் என்றும் வைஷ்ணவம் என்றும் அழைக்கப்படும் இச்சமயம் இந்து சமயத்தின் ஆறு உட்பிரிவுகளுள் ஒன்றாகும். உலகில் தீமைகள் ஓங்கும் போது காக்கும் கடவுளான விஷ்ணு, மனித வடிவில் அவதாரம் எடுத்து அவற்றை அழித்து நல்லவரைக் காப்பார் என்பது வைணவர் நம்பிக்கை. வைணவக் கடவுளான விஷ்ணு எண்ணற்ற அவதாரங்கள் எடுத்துள்ளதாகவும் நம்புகிறார்கள்.