நேரமும்,நிம்மதியும் எங்கே தேடப்படுகிறதோ அங்கே தான் அமைதியையும் தேட வேண்டும். இந்திய இளைய தலைமுறையினர் உறுதியான குறிக்கோளை வைத்து நினைத்ததை அடைய, மீண்டும் வேர்களுக்கு திரும்பவேண்டும். அந்த வேர்களே இந்து மதம் காட்டும் வழிகள்
கவிஞர் கண்ணதாசன் இந்த வேர்களைக் காட்டுகிறார். எப்படி அவரது பாடல்கள் வாழ்க்கைக்கு உதவுகிறதோ, அதேபோல் இந்த நூலில் உள்ள கட்டுரைகளும் உதவும். ஆன்மிகத்தில் நமது பாதையை செப்பனிட்டு காட்ட ஏராளமான திசைகள் உள்ளன. எந்தத் திசை என்பதை கவிஞர் தீர்மானமாக உங்களுக்கு காட்டுகிறார்.
இன்று வரை தமிழ் நூல்களின் விற்பனையில் முன்னணியில் இருக்கும் இந்த 880 பக்க நூலிலிருந்து 262 பக்கங்களில், தேர்ந்தெடுத்த கட்டுரைகள், இன்றைய தலைமுறையினருக்குப் பயன்தரும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இந்த நூலை நீங்கள் படிப்பதினால் உங்கள்திசை வளமான, நிம்மதியான வருங்காலத்தைக் காட்டும்.