முனைவர் மு.வரதராசன் அவர்களின் நூற்றாண்டு விழாவினையொட்டி, கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து பெறப்பட்ட தகவல்களிவை.] மு.வ எனச் சுருக்கமாக அழைக்கப்பட்ட 'டாக்டர்' மு. வரதராசன் (ஏப்ரல் 25, 1912 - அக்டோபர் 10, 1974) 20ம் நூற்றாண்டின் புகழ் பெற்ற தமிழ் அறிஞர்களுள் ஒருவர். இலக்கியக் கட்டுரைகள், ஆராய்ச்சி நூல்கள், போன்றவை மட்டுமன்றிப் பல சிறுகதைகள், புதினங்கள் போன்றவற்றையும் எழுதியுள்ளார்.
இவர் சென்னை பச்சையப்பன் கல்லூரி, சென்னை பல்கலைக் கழகம் ஆகியவற்றில் தமிழ்த்துறைத் தலைமைப் பொறுப்பில் இருந்ததுடன், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பணியாற்றினார்.